உலகளாவியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நபர்களுக்கு இந்த விருது கௌரவமளித்து அவர்களை ஊக்குவிக்கிறது.
இந்த விருதானது “வனம் மற்றும் சுற்றுச் சூழலுக்கான சட்டப்பூர்வ முன்னெடுப்பு (LIFE)” என்ற டெல்லியைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதானது ஸ்வீடனின் மாற்று நோபல் பரிசு எனவும் அழைக்கப்படுகிறது.
LIFE அமைப்பானது அதன் பாதிக்கப்படக்கூடியச் சமூகத்தினர் தங்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான சூழலுக்கான உரிமையைக் கோருதல் போன்றவற்றில் அடிமட்ட அளவிலான அணுகுமறைக்காக இந்த விருதினைப் பெற்றுள்ளது.