உலகளாவிய ஆலோசனை அமைப்பான மெர்சர் தனது வருடாந்திர வாழ்வியல் தர ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 231 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இது இந்த ஆய்வின் 21-வது பதிப்பாகும்.
உலக அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 500 இடங்களுக்கான அறிக்கையில் நகரங்களுக்கிடையேயான ஒப்பீடுகள் பின்வரும் காரணிகளால் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
மனமகிழ் மற்றும் பொதுப் போக்குவரத்து
இயற்கை, பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சமூக கலாச்சாரச் சூழல்
பள்ளிக்கூடம் மற்றும் கல்வி
மருத்துவ வசதி
வீட்டு வசதி
தொடர்ந்து பத்தாவது முறையாக வியன்னா இந்த உலகப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது.
இந்திய நகரங்களுக்கான பட்டியலில் 105-வது இடத்தில் பட்டியலிடப்பட்டு சென்னை முதலிடத்திலும், பெங்களூரு 149 இடத்தில் பட்டியலிடப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளன.