விகாஸ் இயந்திரத்தின் மீள் இயக்க செயல்பாட்டுத் திறன்
January 23 , 2025 31 days 114 0
இஸ்ரோ நிறுவனமானது அதன் விகாஸ் திரவ இயந்திரத்தினை மீள் இயக்கச் செயல் முறையின் செயல்விளக்கத்தினை மிக வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இஸ்ரோவின் ஏவுகல வாகனங்களின் திரவ எரிபொருள் நிலைகளுக்கு ஆற்றலை வழங்குவதற்கான நம்பகமான செயல்பாட்டு அமைப்பான விகாஸ் இயந்திரம், ஏவுகல நிலை மீட்பு மற்றும் மறுபயன்பாட்டினை செயல்படுத்துவதற்காக மறுவடிவமைக்கப் படுகிறது.
ஒரு சமீபத்தியச் சோதனையில், இந்த இயந்திரமானது 60 வினாடிகள் எரியூட்டப்பட்டு, பின்னர் 120 வினாடிகளுக்கு அணைக்கப்பட்டது.
பின்னர் அது வெற்றிகரமாக மீண்டும் இயக்கப்பட்டு சுமார் ஏழு வினாடிகள் மீண்டும் எரியூட்டப் பட்டது.