‘ப்ராஜெக்ட் டைகர்’ என்பதின் இரண்டாம் பதிப்பில் தமிழ் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 62 பங்கேற்பாளர்களால் மொத்தம் 2,959 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இது விக்கிமீடியா அமைப்பு (Wikimedia Foundation - WMF) மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூகுள் மற்றும் WMF ஆகியவை இணைந்து முதன்முறையாக 2018 ஆம் ஆண்டில் இந்தப் போட்டியைத் தொடங்கின.
விக்கிப்பீடியாவிற்கு கட்டுரைகளைச் சமர்ப்பிக்க பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வட்டார மொழிகளின் ஆன்லைன் (நிகழ்நேர) உள்ளடக்கத்தை அதிகரிப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.