ஒரு படிகத்தை உருவாக்க எலக்ட்ரான்களை இணைப்பது கடினமாகும் என்ற வகையில் இந்தக் கட்டமைப்பை அளவிடுவது மிகக் கடினமாகும்.
ஆனால் இயற்பியலாளர்கள் தற்போது விக்னர் படிகத்தை மிகத் தெளிவான வகையில் நேரடியாகப் படம் பிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள், விக்னர் படிகம் உருவாவதை நேரடியாகக் கண்காணிப்பதற்காக ஊடறிதல் ஊடுருவி தொலைநோக்கி (STM) மற்றும் ப்ரிஸ்டைன் கிராபெனின் பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்தினர்.
விக்னர் படிகமானது கணிக்கப்பட்ட பருப்பொருளின் கண்கவர் குவாண்டம் (துளிம) அமைப்புகளில் ஒன்றாகும் என்பதோடு பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் பொருட்களில் இதவும் ஒன்றாகும்.
இருப்பினும், மிகக் குறைந்த வெப்பநிலையில், மின்னியல் தள்ளு விசையானது ஆதிக்கம் பெறுகின்றன என்பதோடு எலக்ட்ரான்கள் தங்களை ஒரு சீரான கட்டமைப்பு அல்லது படிகமாக அமைத்துக் கொள்கின்றன.
இயற்பியலாளர் யூஜின் விக்னர் 1934 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வைக் கணித்தார்.
ஆனால் ஆய்வகத்தில் இந்த விக்னர் படிகங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தான் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.