TNPSC Thervupettagam

விக்யான் தாரா திட்டம்

September 1 , 2024 43 days 110 0
  • விக்யான் தாரா என்ற புதிய முன்னெடுப்பின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) நடத்தும் பல அறிவியல் மேம்பாட்டுத் திட்டங்களை ஒன்றிணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • இளம் திறமையாளர்களை அறிவியல் ஆராய்ச்சியினை நோக்கி ஈர்க்கும் வகையில் செயல்படும் INSPIRE திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இது ஒருங்கிணைக்கிறது.
  • விக்யான் தாரா மூன்று பரந்த கூறுகளைக் கொண்டுள்ளது.
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன மற்றும் மனித திறன் மேம்பாடு
    • ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; மற்றும்
    • புத்தாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயலாக்குதல்.
  • உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை மிக நன்கு ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைக்கான உயிரி தொழில்நுட்பக் கொள்கைக்கு (Bio E3) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • Bio E3 கொள்கையானது, மிகவும் நிலையான, புதுமையான மற்றும் உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான எதிர்காலத்தினை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்