TNPSC Thervupettagam
November 23 , 2022 607 days 400 0
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட் இதுவாகும்.
  • பல தசாப்தங்களாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) ஆதிக்கம் செலுத்தப்படும் இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் துறையின் நுழைவை இது குறிக்கிறது.
  • 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று பெயரிடப்பட்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் நிறுவனத்தின் முதல் பயணத்தில் மூன்று வாடிக்கையாளர்களின் செயற்கைக் கோள்களை ஏற்றிச் சென்றது.
  • இந்தப் புதியப் பயணத்தின் மூலம், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், விண்வெளியில் ராக்கெட்டைச் செலுத்திய நாட்டின் முதல் தனியார் துறை நிறுவனமாக மாறியது.
  • இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவற்றுக்கு ‘விக்ரம்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்