TNPSC Thervupettagam

விசாகப்பட்டினம் வாயுக் கசிவு

May 10 , 2020 1534 days 812 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள தென்கொரிய நிறுவனமான எல்ஜி பாலிமர்ஸ் ஆலையிலிருந்து ஸ்டைரின் என்ற வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. 
  • ஸ்டைரின் என்பது நரம்பு – நச்சாக அடையாளம் காணப்பட்ட ஒரு ரசாயனப் பொருளாகும்.
  • இது மேலும் எத்தினைல்பென்சின், வினைல்பென்சின் மற்றும் பினைல்எத்தீன் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இதன் வேதியியல் வாய்ப்பாடு C6H5CH =CH2 என்பதாகும்.
  • ஸ்டைரின் வாயு என்பது நிறமற்ற, மணமற்ற ஒரு வாயு ஆகும்.
  • ஸ்டைரின் வாயு என்பது அதிக அளவில் எரியக்கூடிய மூலப் பொருளான ஸ்டைரினின் வழிப் பொருளாகும்.
  • ஸ்டைரின் ஆனது மின் விசிறி இறக்கைகள், கோப்பைகள் மற்றும் வெட்டுக் கருவிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருள்களைத் தயாரிப்பதற்கான ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.
  • இது பாலிஸ்டைரின் நெகிழிகள், கண்ணாடியிழை, இரப்பர் மற்றும் மரப்பாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு எரியக்கூடிய திரவம் ஆகும். 
  • இது வாகன வெளிசெல் நீர்மம், புகையிலைப் புகை, மற்றும் பழங்கள் & காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகள் ஆகியவற்றிலும் காணப் படுகின்றது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்