TNPSC Thervupettagam

விசாரணை மீதான தடை ஆறுமாத கால அளவிற்கு மட்டுமே பொருந்தும்

March 30 , 2018 2305 days 673 0
  • குற்றவியல் வழக்கு, ஊழல் வழக்கு அல்லது உரிமையியல் வழக்குகளில் பெறப்படும் விசாரணைத் தடை வெறும் ஆறு மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
  • உயர் நீதிமன்றம் தடையைக் கொடுத்து தீர்ப்பளித்துவிட்ட காரணத்தினாலேயே விசாரணைகள் குறிப்பிடப்படாத நீண்ட எல்லையற்ற காலம் வரை தடுத்து நிறுத்தப்படக் கூடாது என இத்தீர்ப்பு தெரிவிக்கிறது..
  • ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் ரோஹின்டன் பாரிமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடை வாங்கப்பட்ட காரணத்தினால் வழக்காடும் நடவடிக்கைகள் காலம் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக கருதுகிறது.
  • ஆனால் தடை விலக்கப்பட்ட பிறகும் கூட, அந்த தகவல் சரியாக பெறப்படாமல், விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படாமல், தாமதத்திற்கு வழி வகுத்து, இறுதியில் அடிப்படை உரிமையான விரைவான நீதிபெறும் உரிமை மறுக்கப்படுகின்றது.
  • விசாரணைக் காலத்திற்கானத் தடை ஆறு மாத காலத்திற்கு மேல் விலக்களிக்கப்படுவது ஒரு சில விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே என்றும், அதுவும் நீதிமன்ற ஆணையில் அந்த நீட்டிப்பிற்கான காரணங்கள் தெளிவாக முழுவதும் விளக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்