ஐக்கிய அரசு அமீரகம் (United Arab Emirates - UAE) நூற்றுக்கணக்கான சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் பயனடையும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று மாத விசா பொது மன்னிப்புத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
இத்திட்டம் தங்களது பணிக்காலம் முடிந்த பின்பும் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு பயனளிப்பதோடு அவர்கள் எவ்வித அபராதங்களும் செலுத்தாமல் தாய்நாட்டிற்கு திரும்பவும் மேலும் 6 மாதங்கள் கூடுதலாக அங்கு தங்கியிருந்து வேறு வேலை தேடிக் கொள்ளவும் வழி வகை செய்கின்றது.
அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையமானது UAE நாட்டில் வெளிநாட்டவர்களின் உறைவிடம் மற்றும் உள்நுழைவு அனுமதி ஆகியவற்றுக்கு பொறுப்பான ஒரு நிறுவனமாகும்.
UAE தமது நாட்டிலேயே அதிக அளவு எண்ணிக்கை கொண்ட புலம் பெயர்ந்த சமூகமான8 மில்லியன் இந்தியர்களுக்கு புகலிடமாக உள்ளது.
இப்பத்தாண்டுகளில் இத்திட்டம் UAE அரசாங்கம் அறிவிக்கும் மூன்றாவது பொதுமன்னிப்புத் திட்டமாகும். இத்திட்டம் அக்டோபர் 31 அன்றுடன் முடிவடையும்.