விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது நகைகள் மற்றும் வேட்டையாடும் கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 6000 ஆண்டுகள் பழமையான கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டைக்கு அருகில் அமைந்து உள்ளது.
சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சில பொருட்களில் பொதுவாகப் பழங்கால நகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப் படுகின்ற ஜாஸ்பர் (சூரியகாந்தக்கல்) மற்றும் சார்ட் வகை கற்கள் ஆகியவையும் அடங்கும்.
தங்கம் மற்றும் செப்பு நாணயங்கள், உடைந்த சுடுமண்பாண்டச் சிலைகள், சதுரங்க விளையாட்டுக் காய்கள், கண்ணாடி மணிகள் மற்றும் வட்ட சில்லைகள் உட்பட சுமார் 2,800க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் இது வரை கண்டெடுக்கப் பட்டுள்ளன.