திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் இரண்டு பிரசுரங்கள் கொண்ட செப்புத் தகடு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
இது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இந்தக் கல்வெட்டு ஆனது சமஸ்கிருதம் மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்டதாகும்.
இது 1513 ஆம் ஆண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பொறிக்கப்பட்டது.
பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசலப் பட்டகா கிராமம் பரிசாக வழங்கப்பட்டுள்ள ஒரு தகவலானது இந்தத் தகடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது.