இந்த தினமானது 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியா பெற்ற ஒரு தீர்க்கமான வெற்றியை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
பாகிஸ்தான் நாட்டின் பெரும் தோல்வியின் விளைவாக கிழக்கு பாகிஸ்தான் ஆனது இஸ்லாமாபாத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு வங்காளதேசம் எனும் தனி நாடாக உருவாக்கப்பட்டது.
இந்த நாள் இந்திய ஆயுதப்படை வீரர்களின் தியாகம், துணிச்சல் மற்றும் உத்தி சார் திறமை ஆகியவற்றினைக் கொண்டாடுகிறது.