இந்திய இராணுவத்தின் தென்மேற்கு படைப் பிரிவானது (South Western Command of the Indian Army) இராணுவத்தின் இணைந்து செயல்படும் தன்மையினை (Army’s jointmanship) மேம்படுத்துவதற்காக இந்திய விமானப் படையுடன் இணைந்து விஜய் பிரஹார் (Vijay Prahar) எனும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
விஜய் பிரஹார் போர் பயிற்சியானது ராஜஸ்தான் மாநிலத்தின் சூரத்கருக்கு (Suratgarh) அருகிலுள்ள மஹாஜன் (Mahajan) பகுதியில் நடைபெற்றுள்ளது.
இரு வாரங்களுக்கு முன் துவங்கிய இப்போர் பயிற்சியானது மே 9-ஆம் தேதி முடிவடையும்.
இராஜஸ்தானின் மேற்கு பிரிவில் தன்னுடைய வலிமையினை சோதனை செய்ய இந்திய விமானப் படை நடத்திய “ககன் சக்தி” (Gagan Shakti) போர் பயிற்சியினால் உண்டான விழிப்பினைத் தொடர்ந்து விஜய் பிரஹார் போர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் தென்மேற்கு படைப் பிரிவானது 2005 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இது 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று முழு செயல்பாட்டிற்கு வந்தது.
இதன் தலைமையகம் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது.