விஞ்ஞானிகள் முதல் முறையாக ஒளி ஒருமுகப்படுத்துதலைக் கண்டுள்ளனர்
September 20 , 2017 2621 days 891 0
விஞ்ஞானிகள் முதன் முறையாக ஒளி (ஆப்டிக்கல்) ஒருமுகப்படுத்துதல் / துருவப்படுத்தலை கண்டுள்ளனர்.
இந்திய வான் அறிவியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்பிரமணியன் சந்திரசேகர் 70 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணித்த பிறகு விஞ்ஞானிகள் முதன்முறையாக ஒளியை ஒருமுகப்படுத்தும் நிகழ்வைக் கண்டுள்ளனர். (விரைவாக சுழலும் நட்சத்திரம் மூலம் உமிழப்படும் துருவ ஒளி).
ஒளியை ஒருமுகப்படுத்தும் நிகழ்வு என்பது ஒளிக்கற்றையின் நோக்குநிலை ஏற்றத்தாழ்வுகளை ஊசலாட்டத்தை அதன் பயனதிசையில் அளவிடுவது ஆகும்.
இந்த நிகழ்வை உயர் துல்லிய துருவமுனைப்பு கருவி மூலம் கண்டுள்ளார்கள், இது உலகின் அதிக உணர்திறன்கொண்ட வானியல் துருவமுனைப்பான் ஆகும். இது ரெகுலஸில் இருந்து துருவ ஒளியைக் கண்டறிய பயன்படுகிறது. ரெகுலஸ் என்பது இரவில் வானத்தில் இருக்கும் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது சுமார் 79 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது.