TNPSC Thervupettagam

விஞ்ஞானிகா - சர்வதேச அறிவியல் இலக்கிய விழா

November 8 , 2019 1725 days 605 0
  • கொல்கத்தாவில் நடத்தப்பட்ட 5வது இந்திய சர்வதேச அறிவியல் விழா 2019 இன் (India International Science Festival - IISF) ஒரு பகுதியாக, விஞ்ஞானிகா என்ற சர்வதேச அறிவியல் இலக்கிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
  • IISF 2019 ஆனது மத்திய அறிவியல் & தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாகும்.
  • இது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் - தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனம் (CSIR-NISCAIR), விஞ்ஞானப் பிரசார் மற்றும் விஞ்ஞானப் பாரதி ஆகிய அமைப்புகளினால் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டுத் திருவிழாவின் கருப்பொருள் “RISEN (Research, Innovation, and Science Empowering the Nation) இந்தியா - ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் அதிகாரமளிக்கும் தேசம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்