TNPSC Thervupettagam

விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு

August 26 , 2017 2519 days 1011 0
  • விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு (Science Ministers’ Conclave) என்பது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவின் (India International Science Festival - IISF) ஒரு அங்கம் ஆகும்.
  • விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு என்பது விஞ்ஞானத் தொழில்நுட்பங்களைக் கருப்பொருளாகக் கொண்ட கண்காட்சி ஆகும்.
  • இந்தக் கூட்டுக் குழுவினை ஒருங்கிணைப்போர் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி (Vijnana Bharati) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும்.
  • ஆண்டுதோறும் நடைபெறும் விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழுவில், இந்திய விஞ்ஞானத்தின் சமகால மற்றும் வரலாற்றுச் சாதனைகள் பறைசாற்றப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வில் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்குபெறுகின்றனர்.
  • 3 ஆவது விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு
  • நடைபெறும் நகரம்: சென்னை.
  • நடைபெறும் இடங்கள் :
    • இந்திய தொழில்நுட்பக் கழகம் , சென்னை
    • அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை
    • தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT)
  • இந்தக் கூடத்தில் பங்கு பெற சீனா உள்பட அண்டை நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் அதிக மாணவர்கள் ஒன்றாகத் திரண்டு “ உலகில் அதிக மக்கள் கலந்து கொண்ட அறிவியல் பாடம்” என்ற கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர்.
  • விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழுவின் இரண்டாம் கூட்டம் டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்