விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு (Science Ministers’ Conclave) என்பது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவின் (India International Science Festival - IISF) ஒரு அங்கம் ஆகும்.
விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு என்பது விஞ்ஞானத் தொழில்நுட்பங்களைக் கருப்பொருளாகக் கொண்ட கண்காட்சி ஆகும்.
இந்தக் கூட்டுக் குழுவினை ஒருங்கிணைப்போர் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி (Vijnana Bharati) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும்.
ஆண்டுதோறும் நடைபெறும் விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழுவில், இந்திய விஞ்ஞானத்தின் சமகால மற்றும் வரலாற்றுச் சாதனைகள் பறைசாற்றப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வில் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்குபெறுகின்றனர்.
3 ஆவது விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழு
நடைபெறும் நகரம்: சென்னை.
நடைபெறும் இடங்கள் :
இந்திய தொழில்நுட்பக் கழகம் , சென்னை
அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT)
இந்தக் கூடத்தில் பங்கு பெற சீனா உள்பட அண்டை நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் அதிக மாணவர்கள் ஒன்றாகத் திரண்டு “ உலகில் அதிக மக்கள் கலந்து கொண்ட அறிவியல் பாடம்” என்ற கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர்.
விஞ்ஞான அமைச்சர்கள் கூட்டுக்குழுவின் இரண்டாம் கூட்டம் டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.