நாசாவின் விண்மீன் மண்டல எல்லை ஆய்வு (IBEX) விண்கலம் ஆனது வெற்றிகரமான மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு முழுமையாக இயங்கத் தொடங்கியது.
IBEX என்பது சூரியனில் இருந்து வரும் காற்று மற்ற விண்மீன்களின் காற்றோடுத் தொடர்பு கொள்ளுகின்ற எல்லையை (ஹீலியோஸ்பியர்) ஆய்வு செய்வதற்காக என்று வடிவமைக்கப் பட்ட ஒரு சிறிய விண்கலமாகும்.
2008 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட இக்கலமானது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.