இஸ்ரோ நிறுவனமானது விண்வெளிக்கான தனது நான்காவது பிராந்தியக் கல்வி மையத்தை (Regional Academic Centre for Space - RAC-S) மங்களூரில் உள்ள சூரத்கல் என்ற இடத்தில் உள்ள தேசியத் தொழில்நுட்ப கர்நாடக நிறுவனத்தில் அமைக்கின்றது.
இந்த மையமானது இந்திய விண்வெளித் திட்டத்தின் எதிர்காலத் தொழில்நுட்ப மற்றும் நிரல் தேவைகளுக்கு பொருந்தக் கூடிய பகுதிகளில் ஒரு மேம்பட்ட ஆராய்ச்சிக்கு உதவுகின்றது.
இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத் தீவுகள் போன்ற தென் பிராந்தியங்களில் விண்வெளித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவுகின்றது.
இஸ்ரோ தனது முதலாவது RAC-Sஐ ஜெய்ப்பூரிலும் இரண்டாவது RAC-Sஐ குவஹாத்தியிலும் மூன்றாவது RAC-Sஐ குருசேத்திரத்திலும் அமைத்துள்ளது.