TNPSC Thervupettagam

விண்வெளிக் கழிவுகள்

March 31 , 2019 2067 days 681 0
  • இந்தியாவில் செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணைப் பரிசோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தாக்கி அழிக்கப்பட்ட செயற்கைக் கோளிலிருந்து மிக அதிக அளவிலான கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
  • விண்வெளிக் கழிவுகள் என்பது பூமியைச் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் 7500 டன்கள் அளவு கொண்ட தேவையற்ற வன்பொருட்கள் ஆகும். இது வளர்ந்து வரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
  • விண்வெளிக் கழிவுகள் தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து வருவதால், குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையம் உள்பட அனைத்து விண்வெளி வாகனங்களுக்கும் பாதிப்பாக அமையும்.
  • 1978 ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளரான டொனால்டு J. கெஸ்லர் என்பவரால் முன்மொழியப்பட்ட கெஸ்லர் குறைபாடானது விண்வெளிக் கழிவுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்