எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இஸ்ரோவின் பின்வரும் நான்கு மிக முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:
இந்தியாவின் நிலவு ஆய்வுத் திட்டமான சந்திரயான்-4;
வெள்ளிக் கிரகச் சுற்றுக் கல ஆய்வுத் திட்ட (VOM) உருவாக்கம்;
பாரதிய அந்த்ரிக்ஸ் நிலையம் (BAS) மற்றும்
அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த ஏவு வாகனத்தின் (NGLV) உருவாக்கம்.
மொத்தத்தில், இந்த நான்கு திட்டங்களின் மேம்பாட்டுச் செலவுகளுக்காக 22,750 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெள்ளிக் கிரகச் சுற்றுக் கல ஆய்வுத் திட்டமானது, வெள்ளிக் கோளின் வளிமண்டலம் மற்றும் புவியியலை அறிவியலாளர்கள் நன்கு புரிந்து கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதல் அறிவியல் ஆய்வுப் பயணமாகும்.