விண்வெளித் துறையில் சில நடவடிக்கைகளுக்கு 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு என்பது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் வகையானது, செயற்கைக்கோள் உற்பத்தி மற்றும் செயல்பாடு, செயற்கைக் கோள் தரவுத் தயாரிப்புகள் மற்றும் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பயனர் பிரிவில் தன்னியக்கம் (இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவைப்படாத) என்ற வழிமுறையின் கீழ் 74% FDI வரை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த வகையில், 74 சதவீதத்திற்கு மேற்பட்ட அந்நிய நேரடி முதலீட்டிற்கு அரசு சார் (இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவைப்படும்) என்ற வழிமுறையின் கீழ் அனுமதி வழங்கப் படும்.
இரண்டாவது பிரிவில், ஏவு கலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் அல்லது துணை அமைப்புகள், விண்கலங்களை ஏவுவதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பயன்படும் விண்வெளித் தளங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தானியங்கி என்ற வழிமுறையின் மூலம் 49 சதவீதத்திற்கு மிகாமல் FDI மேற்கொள்வதற்கு அனுமதிக்கப் படும்.
இந்த வகையில், 49 சதவீதத்திற்கு மேற்பட்ட அந்நிய நேரடி முதலீட்டிற்கு அரசு சார் (இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவைப்படும்) என்ற வழிமுறையின் கீழ் அனுமதி வழங்கப்படும்.
மூன்றாவது பிரிவில், 100% வரை அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது செயற்கைக் கோள்கள், தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பயனர்-பிரிவுக்கான கூறுகள் மற்றும் அமைப்புகள் அல்லது துணை அமைப்புகளின் தயாரிப்பிற்கான அந்நிய நேரடி முதலீடுகளுக்குத் தானியங்கி என்ற ஒரு வழிமுறையின் கீழ் அனுமதி வழங்கப் படும்.