TNPSC Thervupettagam

விண்வெளித் தொழில்துறைக் கொள்கை – 2025

April 20 , 2025 3 days 65 0
  • தமிழ்நாடு மாநில அமைச்சரவையானது, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு விண்வெளி தொழில்துறைக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • விண்வெளித் தொழில்நுட்பத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது, இந்தத் துறையில் குறைந்தது 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
  • அமெரிக்காவின் புளோரிடாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயன்பாடு சார் கடற்கரை என்ற கருத்துருவின் மூலம் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு அரசானது மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் ஒரு 'விண்வெளி பயன்பாட்டு மையத்தினை' நிறுவ உள்ளது.
  • சுமார் 25 கோடி ரூபாய் அல்லது அதற்கும் குறைவான வருடாந்திர வருவாய் கொண்ட புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் இத்தகைய விண்வெளி சார் தொழில்துறை  சூழல் அமைப்பில் பங்கேற்க தகுதியுடையவையாகும்.
  • காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் பல்வேறு புவியியல் குறிகாட்டிகளைப் பதிவு செய்தல் போன்ற சில நடவடிக்கைகளுக்காக என முதலீட்டுக் காலத்தில் விண்வெளி நிறுவனங்கள் செய்யும் செலவில் சுமார் 50 சதவீதத்தினை இந்தக் கொள்கை மூலம் அரசுத் திருப்பிச் செலுத்தும்.
  • கூடுதலாக, 300 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள விண்வெளித் துறைத் திட்டங்கள் ஆனது மிக பிரத்தியேகமாகக் கட்டமைக்கப்பட்ட ஊக்கத் தொகை தொகுப்புத் திட்டத்திற்குத் தகுதியுடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்