விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பயணம் செய்யும் போது அதிக அளவு எலும்பு நிறைகளை இழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் பணிகளில் இருந்து திரும்பி வந்த பிறகு அதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் போதும் அதற்குப் பின்னரும் விண்வெளி வீரர்களின் மணிக்கட்டு மற்றும் கணுக்கால் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 முதல் 2 சதவீத எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படுவதைக் கண்டறிந்து உள்ளனர்.
கிட்டத்தட்டப் பத்தாண்டுகளில் மனித உடலில் ஏற்படும் எலும்பு இழப்பின் அதே அளவிற்கு இதனால் எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படுகிறது.