TNPSC Thervupettagam

விண்வெளியில் கன சதுரங்கள்

January 2 , 2021 1481 days 904 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த ரியாஸ்தீன் எனும் மாணவர் விண்வெளியில் கன சதுரங்கள் (க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்) எனும் உலகளாவிய ஒரு போட்டியில் கலந்து கொண்டார்.
  • அவரது 37 மிமீ அளவிலான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களான விஷன் சாட் வி1 மற்றும் வி2 ஆகியவை உலகின் மிக இலகுவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோளாக  இடம் பிடித்துள்ளது.
  • இந்தச் செயற்கைக் கோள் 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஆர்.பி. 6 என்ற ஒரு திட்டத்தின் கீழ் நாசாவின் சுழிய அழுத்தம் கொண்ட ஒரு ஆய்வு பலூன் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவரான ரியாஸ்தீன் தஞ்சாவூரில் உள்ள கரந்தை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
  • கியூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற ஒரு போட்டியை 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக நாசாவின் ‘ஐடூடுல் எடுயுங்க்’ (idoodle Eduinc) என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்