தமிழ்நாட்டைச் சேர்ந்த ரியாஸ்தீன் எனும் மாணவர் விண்வெளியில் கன சதுரங்கள் (க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்) எனும் உலகளாவிய ஒரு போட்டியில் கலந்து கொண்டார்.
அவரது 37 மிமீ அளவிலான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களான விஷன் சாட் வி1 மற்றும் வி2 ஆகியவை உலகின் மிக இலகுவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோளாக இடம் பிடித்துள்ளது.
இந்தச் செயற்கைக் கோள் 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஆர்.பி. 6 என்ற ஒரு திட்டத்தின் கீழ் நாசாவின் சுழிய அழுத்தம் கொண்ட ஒரு ஆய்வு பலூன் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவரான ரியாஸ்தீன் தஞ்சாவூரில் உள்ள கரந்தை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கியூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற ஒரு போட்டியை 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக நாசாவின் ‘ஐடூடுல் எடுயுங்க்’ (idoodle Eduinc) என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.