TNPSC Thervupettagam

விண்வெளியில் காராமணி செடிகள்

January 20 , 2025 2 days 61 0
  • இஸ்ரோ நிறுவனமானது, விண்வெளிச் சுற்றுப்பாதையில் தாவர வளர்ச்சி குறித்த ஒரு ஆய்வுகளுக்கான அதன் குறு ஆராய்ச்சி மாதிரியினைப் பயன்படுத்தி விண்வெளியில் காராமணி (லோபியா) விதைகளை வெற்றிகரமாக முளைக்கச் செய்துள்ளது.
  • செவ்வாய் மற்றும் நிலவு போன்ற வானியல் அமைப்புகளில் குடியேறுவதற்காக என மனிதர்கள் மிக நீண்ட விண்வெளி பயணங்களில் ஈடுபடும் போது, ​​விண்வெளியில் வளர்க்கப் படும் தாவரங்கள் அவர்களுக்கு ஒரு மிக நிலையான உணவு ஆதாரத்தை வழங்க முடியும்.
  • தாவரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது ஆக்ஸிஜனை வெளியிடுவதால், அவற்றை விண்வெளியில் வளர்ப்பதன் மூலம் விண்கலத்தில் காற்றைச் சுவாசிக்க உதவும்.
  • ஆனால், ஈர்ப்பு விசையின்மை தாவரங்களின் வேர்கள் கீழ் நோக்கி வளர்வதைத் தடுப்பதால், ஊட்டச்சத்துப் பரவலை ஒரு கடினமான செயலாக மாற்றுகிறது.
  • நீர் ஆனது நுண் ஈர்ப்பு விசையில் அது தொடும் எந்த மேற்பரப்பிலும் ஒட்டிக் கொண்டிருப்பதால், ஒரு தாவரத்தின் அடிப் பகுதியில் தெளிக்கும் போது, ​​அது அதன் வேர்களுக்கு கீழே சென்று சேர்வதில்லை.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளித் தோட்டம் ஆனது, 'Veggie’ அல்லது காய்கறி உற்பத்தி அமைப்பு என்று அழைக்கப் படுகிறது என்ற ஒரு நிலையில் இது சராசரியாக தினசரிப் பயன்பாட்டுப் பையின் அளவிலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்