இந்திய வானியற்பியல் மையத்தின் (IIA - Indian Institute of Astrophysics) விஞ்ஞானிகள் குழு லித்தியம் நிறைந்த செம்பெரு வீண்மீன்களை (red giants) கண்டுபிடித்துள்ளது.
இவை விண்மீனிடையில் இருக்கும் இடைவெளியில் (interstellar space) உள்ள லித்தியம் மற்றும் செம்பெரு வீண்மீன்களில் உள்ள லித்தியம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை உருவாக்கியுள்ளது.
லித்தியம் நிறைந்த ஹீலியம் வாயு கொண்ட எரியும் நட்சத்திரங்களுக்கும் செம்பெரு வீண்மீன்களுக்கும் இடையேயும் தொடர்பு உள்ளது.
இந்த கண்டுபிடிப்பானது, லித்தியம் நட்சத்திரங்களில் உற்பத்தியாவதைக் குறிக்கிறது மற்றும் விண்மீனிடையில் இருக்கும் இடைவெளியில் லித்தியமானது ஏராளமாக இருப்பதையும் இது குறிக்கிறது.
பேரண்டத்தில் தற்போது காணப்படும் லித்தியத்தின் அளவானது ஆதிகாலத்தில் இருந்த அளவை விட நான்கு மடங்கு அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர, மொத்தமுள்ள மூன்று ஆதிகாலக் கூறுகளில் லித்தியமும் ஒன்றாகும். இது பெருவெடிப்பின் அண்ட அணுக்கருத் தொகுப்பின் (bigbang nucleosynthesis) போது உருவானது.
பெருவெடிப்பின் அண்ட அணுக்கருத் தொகுப்பின் கோட்பாடுகளை உறுதி செய்ய இந்தப் பேரண்டத்தில் உள்ள லித்தியம் செறிவூட்டலின் ஆதாரங்களை அடையாளம் காண்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் வகையில் இருக்கின்றது.
பேரண்டமானது தோராயமாக 25% ஹீலியத்தைக் கொண்டுள்ளது என இக்கோட்பாடு கணித்துள்ளது.
இந்திய வானியற்பியல் மையமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.