TNPSC Thervupettagam

விண்வெளியில் லித்தியம்

April 26 , 2020 1549 days 715 0
  • இந்திய வானியற்பியல் மையத்தின் (IIA - Indian Institute of Astrophysics) விஞ்ஞானிகள் குழு லித்தியம் நிறைந்த செம்பெரு வீண்மீன்களை (red giants) கண்டுபிடித்துள்ளது.
  • இவை விண்மீனிடையில் இருக்கும் இடைவெளியில் (interstellar space) உள்ள லித்தியம் மற்றும் செம்பெரு வீண்மீன்களில் உள்ள லித்தியம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை உருவாக்கியுள்ளது.
  • லித்தியம் நிறைந்த ஹீலியம் வாயு கொண்ட எரியும் நட்சத்திரங்களுக்கும் செம்பெரு வீண்மீன்களுக்கும் இடையேயும் தொடர்பு உள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பானது, லித்தியம் நட்சத்திரங்களில் உற்பத்தியாவதைக் குறிக்கிறது மற்றும் விண்மீனிடையில் இருக்கும் இடைவெளியில் லித்தியமானது ஏராளமாக இருப்பதையும் இது குறிக்கிறது.
  • பேரண்டத்தில் தற்போது காணப்படும் லித்தியத்தின் அளவானது ஆதிகாலத்தில் இருந்த அளவை விட நான்கு மடங்கு அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.
  • ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர, மொத்தமுள்ள மூன்று ஆதிகாலக் கூறுகளில் லித்தியமும் ஒன்றாகும். இது பெருவெடிப்பின் அண்ட அணுக்கருத் தொகுப்பின் (bigbang nucleosynthesis) போது உருவானது.
  • பெருவெடிப்பின் அண்ட அணுக்கருத் தொகுப்பின் கோட்பாடுகளை உறுதி செய்ய இந்தப் பேரண்டத்தில் உள்ள லித்தியம் செறிவூட்டலின் ஆதாரங்களை அடையாளம் காண்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் வகையில் இருக்கின்றது.
  • பேரண்டமானது தோராயமாக 25% ஹீலியத்தைக் கொண்டுள்ளது என இக்கோட்பாடு கணித்துள்ளது.
  • இந்திய வானியற்பியல் மையமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்