TNPSC Thervupettagam

விண்வெளி நிலையத்தில் நீர் கரடிகள்

April 28 , 2025 18 hrs 0 min 57 0
  • சுபன்ஷு சுக்லா எனும் விண்வெளி வீரர் ஆக்சியம்-4 என்ற விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளதையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பல சோதனைகளில் ஈடுபட இஸ்ரோ தயாராக உள்ளது.
  • சுக்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தினைச் சர்வதேச விண்வெளி நிலையம் வரையில் இயக்கி, விண்வெளி நிலையத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் முதல் இந்தியராக மாற உள்ளார்.
  • அவர் அங்கு தங்கியிருக்கும் காலக் கட்டத்தில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள உள்ளார் என்ற நிலையில் அவற்றில் மிக முக்கியமான ஒன்று வாயேஜர் நீர்க்கரடிகள் (டார்டிகிரேட்ஸ்) பரிசோதனையாகும்.
  • இந்தச் சோதனைகள் ஆனது சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீர்க் கரடிகளின் உயிர்ப்பிப்பு, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை ஆராய உள்ளது.
  • நீர்க் கரடிகள் அல்லது பாசி பன்றிக் குட்டிகள் என்றும் வெகுவாக அழைக்கப்படும் டார்டிகிரேடுகள் நம்ப முடியாத ஒரு சூழலில் உயிர்வாழும் திறன்களைக் கொண்டதாக அறியப்படும் சிறிய, நீரில் வாழும் நுண்ணிய விலங்குகள் ஆகும்.
  • இந்த உயிரினங்கள் ஆனது, பொதுவாக 0.3 மில்லிமீட்டர் முதல் 0.5 மில்லி மீட்டர் வரை நீளம் கொண்டது என்பதால் அவற்றைப் பார்க்க நுண்ணோக்கி அவசியமாகும்.
  • டார்டிகிரேடுகள் பூமியில் சுமார் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன என்பதோடு அவை பாசிகள், பாசிக் காளான் (லைகன்கள்), மண், இலை மக்குக் குப்பைகள், நன்னீர், கடல் சூழல்கள், உயரமான மலைகள், ஆழ்கடல்கள், வெப்ப நீரூற்றுகள் மற்றும் துருவப் பனிக்கட்டி உள்ளிட்டவற்றிலும் கூட காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்