நாசாவில் (தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம்) பணியாற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச் என்பவர் ஒரு பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட ஒரே விண்வெளிப் பயணத்தின் போது நீண்ட நாட்கள் அங்கு தங்கியதற்கான சாதனையை உருவாக்கியுள்ளார்.
2016 - 2017 ஆம் ஆண்டில் முன்னாள் விண்வெளி நிலையத் தளபதியான பெக்கி விட்சன் என்பவர் 288 நாட்கள் அங்கு தங்கி இருந்தார். இச்சாதனையை கிறிஸ்டினா கோச் முறியடித்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) உள்ளார்.
இவர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு திரும்பும் நேரத்தில் 300 நாட்களுக்கு மேல் விண்வெளியில் கழித்திருப்பார்.