இந்திய விண்வெளி நிறுவனம் ஆனது, ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தவுள்ளது.
இந்த ஆய்வுத் திட்டத்திற்கு 'space MAITRI' (ஆஸ்திரேலியா-இந்தியாவின் தொழில் நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கான ஆய்வுத் திட்டம்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது SSLV எனப்படும் இந்தியாவின் மிகச்சிறிய மற்றும் புதிய ஏவுகலம் மூலம் ஏவப் படும் என்பதோடு மேலும் அதில் 'ஆப்டிமஸ்' எனப்படும் 450 கிலோ எடை கொண்ட ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்படும்.
இந்த ஏவுதலுக்கான வணிக ஒப்பந்தம் ஆனது, 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் ஆஸ்திரேலிய நிறுவனமான விண்வெளி இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.
ஆப்டிமஸ் செயற்கைக்கோள் என்பது இதர மற்ற செயற்கைக் கோள்களின் சுற்றுப் பாதையில் ஆய்வு செய்வதற்கும் இதர சில வகையான பழுதுபார்ப்பு வேலைகளைச் செய்வதற்குமான ஒரு தனித்துவமான வன்பொருள் ஆகும்.