TNPSC Thervupettagam

விதி 176 மற்றும் விதி 267

July 24 , 2023 364 days 419 0
  • மணிப்பூர் நிலவரம் தொடர்பான விவாதத்தின் நடைமுறை குறித்து அரசுக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் இடையூறு ஏற்பட்டது.
  • எதிர்க்கட்சிகள் அவையின் கருத்தினை வெளிப்படுத்துவதற்கு 267வது விதியின் கீழ் விவாதத்தினை மேற்கொள்ளுமாறும், அதே சமயம் அரசானது 176வது விதியின் கீழ் விவாதத்தை மேற்கொள்ளுமாறும் முன்மொழிந்தன.
  • 176வது விதியின் கீழ் குறுகிய கால விவாதமும், 267வது விதியின் கீழ் நீண்ட விவாதமும் மேற்கொள்ளப்படும்.
  • 176வது விதியின் கீழ், இரண்டரை மணி நேரத்திற்கு மிகாமல் குறுகிய கால விவாதம் என்பது மேற்கொள்ள அனுமதிக்கப் படுகிறது.
  • விதி 176 மற்றும் 177 ஆகியவற்றின் கீழ், ஒரு அவசர விவகாரமானது ஒரு குறுகிய கால விவாதத்திற்கு என்று உடனடியாகவோ, சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்திலோ எடுத்துக் கொள்ளப் படலாம்.
  • விதி 267 ஆனது செயல்பாட்டு நிரலில் பட்டியலிடப்பட்டுள்ள அவை நடப்பு தொடர்பான ஒரு குறிப்பிட்ட விதியை ரத்து செய்கிறது.
  • இந்த விவகாரம் நீண்ட நேரம் விவாதிக்கப்படுவதால், 267வது விதியின் கீழ் பிரதமர் அவையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • 1990 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்வேறு விவாதங்களுக்கு 11 முறை இந்த விதி பயன்படுத்தப் பட்டதாக பாராளுமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.
  • ஒத்தி வைப்புத் தீர்மானம் ஆனது, மக்களவையில் நடைமுறை மற்றும் அவை நடப்பு விதிகளின் 56-63 ஆகிய பிரிவுகளின் கீழ் கையாளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்