TNPSC Thervupettagam

வினிஷா உமாசங்கர்

January 15 , 2022 1049 days 536 0
  • 16வது அதிகாரப் பூர்வ குயின்ஸ் பேட்டன் ரிலே என்ற ஒரு நிகழ்வில் இந்திய அணியின் சார்பாக, வினிஷா பேட்டன் (தண்டத்தை) என்பதினைத் தாங்கி சென்றார்.
  • இந்த நிகழ்வு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 07 அன்று லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் தொடங்கியது.
  • இது 294 நாட்களில் 72 காமன்வெல்த் நாடுகள் மற்றும் ஆட்சிப் பிரதேசங்களை  கடந்து, 2022 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் முடிவடைய உள்ளது.
  • 2022 காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது.
  • இதற்காக வேண்டி ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தினை நோக்கிச் செல்லும் பாதையில் இந்தியா 27வது நாடாக உள்ளது.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தாஹியா, டெல்லியில் நடந்த குயின்ஸ் பேட்டன் ரிலேயில் ஒரு மாதிரி ஓட்டம் மூலம் இதனைத் துவக்கி வைத்தார்.
  • குயின்ஸ் பேட்டன் ரிலே போட்டியானது  ஜனவரி 14 ஆம் தேதியன்று பெங்களூருவிலும், ஜனவரி 15 ஆம் தேதியன்று புவனேஸ்வரிலும் நடைபெற்றது.
  • நீராவி சலவைப் பெட்டிக்கு ஆற்றல் வழங்குவதற்காக வேண்டி சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வகையில் தனது நடமாடும் சூரிய சக்தி சலவை வண்டியைக் கண்டுபிடித்ததன் மூலம் வினிஷா உலகை ஆச்சரியப் படுத்தினார்.
  • இவர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இவர் தனது கண்டுபிடிப்பிற்காக தேசியப் புத்தாக்க அறக்கட்டளை இந்தியா என்ற அமைப்பினால் நிறுவப்பட்ட டாக்டர். A.P.J. அப்துல் கலாம் IGNITE விருதினை வென்றார்.
  • தேசியப் புத்தாக்க அறக்கட்டளை என்பது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு  தன்னாட்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்