TNPSC Thervupettagam

வினேஷ் போகட் தகுதி நீக்கம்

August 10 , 2024 105 days 224 0
  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் நிபந்தனைகள் எதுவுமற்ற ​​இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், உடல் எடையை குறைக்கத் தவறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
  • தகுதி நீக்கம் என்றால் போகட் பதக்கத்தினை வெல்ல முடியாது என்று பொருளாகும்.
  • இறுதிப் போட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், வெள்ளிப் பதக்கம் அவருக்கு வழங்கப்படாது என்பதோடு, தங்கப் பதக்கமானது அவருடன் போட்டியிட்ட இறுதிப் போட்டியாளருக்கு வழங்கப்படும்.
  • வினேஷ் தங்கப் பதக்கத்திற்கான போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • வினேஷ் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் எடை மதிப்பீட்டின் போது போட்டிக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஒரு எடை வரம்பிற்கு மேல் 100 கிராம் அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டது.
  • ஒருங்கிணைந்த உலக மல்யுத்த விதிகள் புத்தகத்தின் 11வது பிரிவின் படி, "ஒரு தடகள வீரர் எடை மதிப்பீட்டில் கலந்து கொள்ளா விட்டாலோ அல்லது அந்த வரம்பைப் பூர்த்தி செய்யாவிட்டாலோ, அவர் அந்தப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதன் தர வரிசையில் இடம் பெறாமல் கடைசி இடத்தினைப் பெறுவார்."

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்