பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஐக்கியப் பேரரசின் அரசானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு முக்கிய ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
இது வடக்கு அயர்லாந்தில் பின்பற்றப்பட உள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்குப் பிந்தைய வர்த்தக விதிகளுக்கு உதவும்.
'வின்ட்சார் கட்டமைப்பு' ஆனது வடக்கு அயர்லாந்து நெறிமுறைக்கு மாற்றாக அமையும்.
இது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியானப் பிரச்சனைகளை உருவாக்கிய, பிரெக்சிட் தோல்விக்குப் பிறகான சிக்கல் நிறைந்த ஒப்பந்தமாகும்.
இந்த புதிய வின்ட்சார் கட்டமைப்பானது வடக்கு அயர்லாந்துப் பகுதிக்குள்ளேயே வணிகம் செய்யப் படும் பொருட்களுக்கான பச்சை வழித்தடம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கொண்டுச் செல்லப் படும் பொருட்களுக்கான சிவப்பு வழித்தடம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
இது ஐக்கியப் பேரரசில் வடக்கு அயர்லாந்தின் நிலையைப் பாதுகாப்பதையும், அந்த நாட்டு மக்களின் இறையாண்மையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.