TNPSC Thervupettagam

விமானச் சேவை ஒப்பந்தம்

February 26 , 2023 640 days 279 0
  • இந்தியா மற்றும் கயானா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இரு நாடுகளுக்கும் இடையே விமானச் சேவைக்கு வழி வகுக்கும்.
  • கயானாவுடனான இந்த விமானச் சேவை ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையேயான விமானச் சேவைகளை வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பைச் செயல் படுத்திட முயலும்.
  • 2012 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கயானாவில் இந்தியர்கள் கணிசமான அளவில், அந்நாட்டு மக்கள்தொகையில் 40% கொண்ட மிகப்பெரிய ஒரு இனக் குழுவாக உள்ளனர்.
  • இந்தியா மற்றும் கயானா ஆகியவை சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் (சிகாகோ உடன்படிக்கை 1944) கையெழுத்திட்டுள்ளன.
  • தற்போது, இந்தியா சுமார் 110 நாடுகளுடன் விமானச் சேவை ஒப்பந்தங்களை மேற் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்