TNPSC Thervupettagam

விமானத்திற்குள் இணையச் சேவை வழங்கப்படல்

May 4 , 2019 2033 days 656 0
  • அடுத்த மூன்று மாதங்களில் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்திய வான்பகுதியில் பறக்கும் போது பயணிகளுக்கு இணையச் சேவையை அளிக்கவிருக்கின்றன.
  • உள்நாட்டு விமானங்கள் இதைச் செயல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.
  • 3000 மீட்டர் உயரத்திற்கு மேல் விமானம் சென்ற பின்பு புவிநிலைத் துணைக்கோள் மூலம் இணையச் சேவையைப் பெறும்.
  • இந்தச் செயற்கைக் கோள்கள் விமானத்தின் அலை வாங்கிக்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்பும்.
  • இந்தியாவின் இன்சாட் செயற்கைக் கோள் மட்டுமே இந்தப் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • செயற்கைக் கோள்களின் மூலம் இணையத்தின் நேரடி தொடர்பானது பின்வருவனவற்றின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
    • Ku கற்றை – 12-18 ஜிகாஹெர்ட்ஸ் (GHz)
    • Ka கற்றை – 26-40 ஜிகாஹெர்ட்ஸ் (GHz).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்