முதன்முறையாக, தேசிய எண்ணெய் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விமான எரிபொருள் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.
இது ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் சிறிய விமானங்களை இயங்கச் செய்யும் எரிபொருளாகும்.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படும் இந்த எரிவாயு AVgas 100 LL எனப் பெயரிடப் பட்டது.
இந்த ஏற்றுமதியானது இந்திய நாட்டின் எரிபொருள் வரலாற்றில், ஒரு நிகர இறக்குமதியாளராக விளங்கிய நிலையில் இருந்து ஒரு ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு இந்தியாவினை மாற்றி ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
விமான எரிவாயு அடங்கிய 80 பீப்பாய்கள் கொண்ட முதல் சரக்குப் பெட்டகமானது, பப்புவா நியூ கினியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.