சர்வதேச விமான நிலையச் சபையானது, கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான விமான நிலையச் சேவை தர விருதினை வழங்கியுள்ளது.
இந்த விருதானது, உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, தடையற்றப் போக்குவரத்தை உறுதி செய்து பயணிகளின் திருப்தியை மேலும் வலுப்படுத்திய ‘பாதுகாப்பு திட்டத்தினை’ திறம் படச் செயல்படுத்தியதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.