இந்தியா மற்றும் போலந்து நாடுகளுக்கிடையேயான சிவில் விமான போக்குவரத்து ஒத்துழைப்பின் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது புரிந்துணர்வு ஒப்பந்தமானது 5 வருட ஒப்பந்தகாலமுடையது.
இந்தியா மற்றும் போலந்து நாடுகளிடையேயான விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை பாதிக்கக் கூடிய சட்ட மற்றும் செயல்முறை விவகாரங்களை சீர்படுத்தி இரு நாடுகளின் விமானப் போக்குவரத்து சந்தைக்கு ஆதரவு அளித்திட இந்த ஒப்பந்தம் உதவும்.