TNPSC Thervupettagam

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் முகுருஸா சாம்பியன்

July 16 , 2017 2542 days 1153 0
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா.
  • அதேநேரத்தில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை இழந்தார் அமெரிக்காவின் 37 வயது வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ்.
  • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கார்பைன் முகுருஸா, வீனஸ் வில்லியம்சை தோற்கடித்தார்.
  • இதன்மூலம் விம்பிள்டனில் பட்டம் வென்ற 2-ஆவது ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் முகுருஸா.
  • முதல் நபர் முகுருஸாவின் தற்போதைய பயிற்சியாளர் கான்சிடா மார்ட்டினிஸ் ஆவார். அவர் 1994-இல் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச் சுற்றில் மார்ட்டினா நவரத்திலோவாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
  • இது முகுருஸாவின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்