TNPSC Thervupettagam

வியாழனின் துணைக் கோளில் ஓசோன்

April 9 , 2024 230 days 371 0
  • வியாழனின் துணைக் கோளான கலிஸ்டோவில் ஓசோன் இருப்பதைக் குறிக்கும் வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கலிஸ்டோவில் ஓசோன் இருப்பது கண்டறியப்பட்ட நிகழ்வானது அங்கு ஆக்ஸிஜன் இருப்பதைக் குறிக்கிறது.
  • சனிக் கோளிற்கு அடுத்தபடியாக, சூரிய குடும்பத்தில் அதிக துணைக் கோள்களைக் கொண்ட கோள் வியாழன் ஆகும்.
  • கலிஸ்டோ வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள்களில் ஒன்றாகும் மற்றும் கேனிமேட் மற்றும் டைட்டனுக்கு அடுத்தப்படியாக சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாவது பெரியத் துணைக்கோள் ஆகும்.
  • அதன் பிரம்மாண்டமான அளவை விட, கலிஸ்டோ அதன் கட்டமைப்பினால் வேறுபட்டு காணப்படுகிறது.
  • அது புதன் கிரகத்தைப் போல் பெரியதாக இருந்தாலும், அதன் நிறை பாதிக்கும் குறைவாகவே உள்ளது.
  • கலிஸ்டோ முதன்மையாக உறைந்த பனி, பாறைப் பொருட்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் சில கரிமச் சேர்மங்களால் ஆனது.
  • இந்த பொருட்கள் ஆனது இந்தத் துணைக்கோளினைச் சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர்த்து உயிர் வாழ்வதற்கு உகந்தச் சூழல்களை ஆதரிப்பதற்கான ஒரு சாத்தியமான கிரகமாக மாற்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்