TNPSC Thervupettagam

வியாழன் கோளின் படங்கள்

August 26 , 2022 826 days 433 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது முதன்முறையாக வியாழன் கிரகத்தின் சிறப்பான தோற்றத்தைப் படம் பிடித்துள்ளது.
  • இந்தப் படங்களானது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினால் 2022 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று எடுக்கப்பட்டது.
  • இந்தக் கிரகத்தின் அனைத்துப் பகுதிகளும் இந்த ஒரு படத்தில் சரியாகப் புலப்படச் செய்கின்றன.
  • அதன் மங்கலான வளையங்கள், அதன் இரண்டு துணைக் கோள்கள் (அமல்தியா மற்றும் அட்ராஸ்டியா நிலவுகள்) மற்றும் பிரகாசமான நட்சத்திரங்கள் பால்வீதியில் நன்றாகப் புலப்படுகின்றன.
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஒரு பெரிய அகச்சிவப்புத் தொலைநோக்கி ஆகும்.
  • இது பேரண்டத்தின் வரலாற்றுக் காலத்தின் ஒவ்வொருக் கட்டத்தையும் ஆய்வு செய்ய உள்ளது.
  • இந்தத் தொலைநோக்கியானது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்