TNPSC Thervupettagam

வியாழன் வடிவிலான இரட்டைக் கோள் கண்டுபிடிப்பு

April 10 , 2022 869 days 567 0
  • K2-2016-BLG-0005Lb என அழைக்கப்படும் வியாழனின் ஒரே மாதிரியான ஒரு இரட்டைக் கோளினை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது வியாழன் கோளினை ஒத்த நிறையைக் கொண்டுள்ளது.
  • வியாழன் கோளானது நமது சூரியனிலிருந்து (462 மில்லியன் மைல் தொலைவில்) இருப்பது போல இந்தக் கோளானது அதன் நட்சத்திரத்திலிருந்து (420 மில்லியன் மைல் தொலைவில்) ஏறக்குறைய அதே தொலைவில் உள்ளது. 
  • இந்த ஆய்வு பற்றியத் தகவல்கள் ArXiv.org என்ற தளத்தில் முன் அச்சாக வெளியிடப் பட்டது
  • இது ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகள் என்ற இதழில் வெளியிடச் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
  • பூமியிலிருந்து சுமார் 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த புறக்கோள் ஆனது, 2016 ஆம் ஆண்டு கெப்ளர் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் முதன் முறையாக கண்டறியப்பட்டது.
  • இந்தக் கோளைக் கண்டறிய, விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் மற்றும் ஈர்ப்பு நுண்குவிதல் போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தினர்.
  • K2-2016-BLG-0005Lb என்பது விண்வெளி அடிப்படையிலான தரவுகளிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட முதல் பிணைப்பு சார்ந்த நுண்குவியப் புறக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்