TNPSC Thervupettagam

வியோம் மித்ரா - மனித ரோபோ

January 24 , 2020 1641 days 727 0
  • இஸ்ரோ நிறுவனமானது ககன்யான் திட்டத்திற்காக ஒரு சோதனை முயற்சியாக “வியோம் மித்ரா” என்று அழைக்கப்படும் ஒரு அரை மனித ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
  • வியோம் மித்ரா என்றால் விண்வெளித் தோழி என்று பொருள்படும்.
  • இது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி III விண்கலத்தின் மூலம் ஆளில்லா விமானப் பயணம் மூலமாகச்  செலுத்தப்பட இருக்கின்றது. இது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது ஆளில்லா விமானப் பயணம் மூலமாகச் செலுத்தப்பட இருக்கின்றது.
  • இந்த அரை மனித ரோபோவானது இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பேசும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்