TNPSC Thervupettagam

விராட் கோலி - ஐசிசி தரவரிசைப் பட்டியல்

August 6 , 2018 2175 days 652 0
  • இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி அடித்த 200 ரன்களானது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவருக்கு முதலிடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் இரண்டாமிடத்திற்கு அனுப்பினார்.
  • கோலி இங்கிலாந்திற்கு எதிராக எட்க்பாஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிஸ்ஸில் 149 ரன்கள் குவித்து தனது 22 சதத்தைப் பூர்த்தி செய்தார்.
  • அவர் இரண்டாவது இன்னிஸ்ஸில் 51 ரன்கள் சேர்ந்தார்.
  • 2011ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடம் பிடித்த முதல் இந்திய மட்டை வீச்சாளர் என்ற நிலையை கோலி அடைய இச்சாதனை உதவி புரிந்துள்ளது.
  • டெண்டுல்கர் மற்றும் கோலி ஆகியோரைத் தவிர, திலீப் வெங்சர்க்கார், ராகுல் திராவிட், வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் காம்பீர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மற்ற இந்திய மட்டை வீச்சாளர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்