TNPSC Thervupettagam

விரிவான சுற்றுச்சூழல் மாசுபாட்டுக் குறியீடு (CEPI)

April 6 , 2021 1235 days 686 0
  • மூலம், வழித்தடம் மற்றும் ஏற்பிகளின் வழிமுறைகளை (அல்காரிதம்களை) பின்பற்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுற்றுச்சூழலின் தரத்தினை வகைப்படுத்துவதற்கான ஒரு பகுத்தறியும் குறியீடாக விரிவான சுற்றுச்சூழல் மாசுபாட்டுக் குறியீடு (Comprehensive Environmental Pollution Index – CEPI) உள்ளது.
  • CEPI குறியீட்டில் ஏற்படும் மதிப்பின் அதிகரிப்பு சுற்றுச்சூழல் மீதான மோசமான விளைவுகளைக்  குறிக்கிறது.
  • டெல்லியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) தமிழ்நாட்டின் CEPI மதிப்பு பற்றிய மதிப்பீட்டினை செய்துள்ளது.
  • தமிழ்நாட்டின் தொழிற்சாலைப் பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துள்ளது.
  • வேலூர் மாவட்டம் மிகவும் மாசடைந்துள்ள ஆறுகளைக் கொண்டதாக உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு CEPI நீரின் மதிப்பின் படி, தமிழ்நாட்டிலுள்ள ஐந்து தொழிற்சாலைப் பகுதிகள் தண்ணீருக்கான மதிப்பில் 50க்கும் மேல் கொண்டுள்ளன.
  • இவற்றுள்,
    • வேலூர் – வட ஆற்காடு, மணலி மற்றும் திருப்பத்தூர் ஆகியவை “மிகவும் மாசடைந்துள்ள பகுதிகள்” – 60 மற்றும் அதற்கும் மேற்பட்ட CEPI மதிப்பினைக் கொண்டுள்ளன.
    • கடலூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை “மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்” – 50 மற்றும் 60க்கு இடைப்பட்ட CEPI மதிப்பை கொண்டுள்ளன.
  • தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் மாசுபடுத்திகளான  கால்சியம், குளோரைடு மற்றும் இரும்பு ஆகியவை நிலத்தடி நீருக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தலாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்