மத்திய அமைச்சரவை வடகிழக்கு மண்டலத்தின் மேகாலயா மாநிலத்தில் கைபேசி சேவைகளை மேம்படுத்துவதற்காக விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தின் செயலாக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் அடையாளம் காணப்பட்ட கைபேசி சேவைகள் பெறாத பகுதிகளில் 2G மற்றும் 4G கைபேசி அடைவிற்கான விதிகளைக் கொண்டுள்ளதோடு, மேகாலயாவின் தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் தடையற்ற கைபேசி சேவையை வழங்கும்.
இத்திட்டத்திற்கு உலகளாவிய சேவை உதவி நிதியத்தினால் (Universal Service Obligation Fund - USOF) நிதியளிக்கப்படுகிறது.
USOF ஆனது ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியத்திற்கான நிதியானது, உலகளாவிய அணுகல் வசூலில் (Universal Access Levy - UAL) இருந்து வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பல்வேறு உரிமக் கட்டணங்களுக்கு அவர்கள் மீது விதிக்கப்படும் வரியின் குறிப்பிட்ட சதவீத பணமே UAL ஆகும்.